Monday, 11 June 2012

இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - மெரினாவில் இளைஞர்கள் பரப்புரை

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பது இந்தியர்கள் , தமிழர்கள் பலருக்கும் தெரியாது . அதை தெரியப்படுத்தும் விதமாக இன்று சென்னை கடற்கரையில் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்ற உண்மையை ஆதாரங்களுடன் தமிழர்களுக்கும். பிற மொழி இனத்தவர்களுக்கும் தமிழர் பண்பாட்டு நடுவம் எடுத்துச் சென்றது .

இந்த செய்தியை மக்கள் முதல் முறையாக கேட்டுத் தெரிந்தனர். சிலர் நம்ப மறுத்தனர். இதை ஏற்றுக் கொண்டவர்கள் நமக்கு நன்றி சொன்னதுடன் புகை படம் எடுக்க சம்மதம் தெரிவித்தனர். இது நிச்சயம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம் . இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது போல் முயற்சியை அனைத்து நகரங்களிலும் செய்ய தோழர்கள் முன் வர வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவம் கேட்டுக் கொள்கிறது.



குஜராத் உயர் நீதி மன்ற தீர்ப்பு விவரம்.

இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை குஜராத் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி தீர்ப்பளித்துள்ளது.

இந்தி மொழி பெரும்பாலான மக்களால் இந்தியாவின் பல மாநிலங்களில் பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவ்வாறான அதிகாரபூர்வ அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறவில்லை என்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.

குஜராத் உயர்நீதிமன்றத்தில் சுரேஷ் கச்சாடியா என்பவர் 2009 ஆம் ஆண்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் இந்தி மொழி, இந்தியாவின் தேசிய மொழி என்பதால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அடைக்கப்பட்ட பெட்டிகளின் மேல் அப்பொருளினைப் பற்றிய விலை, உள்ளடக்கம், தரம் ஆகிய விவரம் குறித்த தகவல்களை இந்தி மொழியில்தான் அச்சிட வேண்டும். இது தொடர்பான உத்தரவை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் விண்ணப்பித்திருந்தார்.

இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகோபாத்யாயா தலைமையிலான நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல. இந்தியாவின் பெரும்பாலான மக்களால் இந்தி மொழி பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழி என்று வாதிடுவதை ஏற்க முடியாது.இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தி மொழியை ஆட்சி மொழியாக மட்டுமே அங்கீகரித்துள்ளதே தவிர தேசிய மொழியாக அறிவிக்கவில்லை. அவ்வாறு எந்த அறிவிப்பும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை.எனவே இந்தி என்பது ஆட்சி மொழி மட்டுமே தவிர; அது தேசிய மொழி அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்று தெரிவித்தனர்.

Sunday, 10 June 2012

தமிழினத்தலைவன் பிரபாகரன்

உனக்கென்று மாளிகை இல்லை.,
பூனை படை இல்லை,
7 தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் எண்ணம் இல்லை,
ஊரெல்லாம் மனைவிகள் இல்லை,
தெருவுக்கு ஒன்று என்று பிள்ளைகள் இல்லை,
மகனை வெளிநாட்டிற்கு கூத்தடிக்க அனுப்பவில்லை ,
மகளை 100 கோடிக்கு திருமணம் என்ற பெயரில் ஆடம்பரமாக விற்கவில்லை,
மனைவி பெயரில் வர்த்தக நிறுவனம் இல்லை,
குடும்பப் பெயரில் தொலைக்காட்சி இல்லை,
பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கவில்லை.
---------------------------நீ செய்தது எல்லாம்---------------------------
இனத்திற்காகவும மக்களுக்காகவும், உரிமைக்காகவும் உண்மையாக போராடியதும், எந்த சமரசத்திற்கும் இடம் இல்லாமல் , விடுதலைக்காக எதையும் இழக்க துணிந்த உண்மைத்தலைவன் நீ , இந்த உலகத்திற்கு விடுதலை போராட்டத்தின் உண்மை நெறியை உணர்த்திய ஒப்பற்ற போராளி நீ, பெயரில் மட்டும் எழுச்சியை வைத்துக்கொண்டு சிறுத்தைகள், சூரியன்கள் என்று பெயர்களை வைத்துக்கொண்டு அற்ப பணதிற்க்க்காகவும் புகழுக்காகவும் பதவிக்காகவும் வாழும் ஆடம்பர ஜென்மங்களுக்கு மத்தியில் ., அமைதியாக இயக்கத்தின் பெயருக்கேற்ப தன்னிகரில்லா வீரமும் அர்பணிப்பும் கொண்ட போராட்டங்களையும் , போராளிகளையும் உன்னை போலே உருவாக்கி, தீவிரவாதம் என்கிற தவறான பெயரையும் இந்த அறியாமை கொண்ட உலகத்திடம் வாங்கிக்கொண்டு .. சலனமில்லாமல் குடும்பத்தையும், உன்னுடன் இருந்த ஒப்பற்ற போராளிகளையும், நல்ல ஜீவன்களையும் இனத்திற்காக பலிகொடுத்துவிட்டு , இருக்கிறாயா ? இல்லையா? என்ற கேள்வியையும் எழவிட்டு... எங்கேயோ இருந்துகொண்டு எங்களை வழி நடத்திக்கொண்டிருக்கும் உன்னை இந்த தமிழினம் ஈன்றது இந்த இனத்திற்க்கல்லவா பெருமை!!.. உன்னை பற்றி இன்று கூட அறியாமல் பேசுபவர்களும் அறிய மறுப்பவர்களும் இந்த இனத்தின் அவல நிலைமை...
பாதையை தேடாதே, உருவாக்கு..
By: தமிழால் இணைவோம்

நாசாவையே அதிர வைத்த நம் திருநள்ளாறு

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!

“இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ??? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!

எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!! எப்படியா ?? அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல்!

நாம் தமிழர்

சீமான் கொலைகாரராகவே இருந்தாலும், அவரை ஆதரிக்கத்தாண்டா செய்வோம்.

என்னமா சீமான் மேல கரிசனம் கொள்றானுங்க, இந்த மூதேவிங்க.

ஒருத்தன் சொல்றான் அவரு தினமும் குடிக்கறார், இன்னொருத்தன் அவரு தினமும் ஒரு பெண்களுடன் செல்கிறாராம், இன்னொருத்தன் இனப் படுகொலைக்கே அவருதான் காரணமாம். சூதாட்டம் ஆடுவாராம் தினமும். என்னங்கடா கலர், கலரா ரீல் விடுறிங்க. நாங்க என்ன உங்க கட்சி காரனுங்களா மதி மறந்து காலம், காலமாக ஆட்டு மந்தையாக இருக்க.

எங்களுக்கு தெரியும்டா, எவன் நல்லவன், எவன் கெட்டவன் அப்படின்னு. இவனுங்க பண்ற எல்லா தப்பையும் அவரு பேரு போட்டு விடறானுங்க. வென்றுகள்.

நீ மகிந்தவிடன் சென்றால் அவர் இதை விட இன்னும் அதிகமாக சொல்வார், உனக்கும் சொல்லி கொடுப்பார். போங்கடா வெண்ணைகளா. இனியும் வீணாப் பேசி, வீணா போகாதிங்கடா. சீமானின் வளர்ச்சியினை உன்னால் ஒரு நாளும் தடுத்து நிறுத்த முடியாது. தமிழனுக்கு அவர் குரல் கொடுக்கும் வரை என்றும் அவருக்கு தமிழர்களது ஆதரவு இருந்து கொண்டே இருக்கும். நீதான் திராவிடன் ஆச்சே, அவனை தேடி கண்டுபிடி, கூட்டம் சேர்.