Friday, 28 December 2012

பாரம்பரிய இயற்கை மருத்துவம்-3

1.யானைக்கால் நோய் குணமாக,ஞாபக சக்தி பெருக வல்லாரை கீரை தொடர்ந்து சாப்பிடலாம்.
2.அத்தி பழம் தொடர்ந்து சாப்பிட உடல் வலிமை பெரும்.
3.கால் ஆணியை அகற்ற இரவில் மஞ்சள்,மருதானி அரைத்து அதன் மீது கட்ட வேண்டும்.
4.இதய படபடப்பு நீங்க தினசரி 1 பேரிக்காய் சாப்பிட வேண்டும்.
5.சர்க்கரை நோயை கட்டுபடுத்த தினசரி 5 ஆவாரம் பூவை மென்று சாப்பிட வேண்டும்.
6.வாய்ப்புண் குணமாக தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடிக்கவும்.
7.அரை கீரையை வாரமிருமுறை உணவில் சேர்த்து வந்தால் கண் குளிர்ச்சி அடையும்.
8.தினசரி 1 கப் தயிர் சாப்பிட ரத்த குழாய்களில் உள்ள அடைப்பு நீங்கும்.
9.விளக்கெண்ணெயும்,சுண்ணாம்பும் கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் தொண்டையில் தடவ தொண்டை வலி குணமாகும்.
10.பெண்கள் பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் பற்றுபோட பால் அதிகம் சுரக்கும்.

Sunday, 16 December 2012

பாரம்பரிய இயற்கை மருத்துவம்-2

1.அன்னாச்சி பழம் தினம் சாப்பிட வயிற்றுபூச்சிகள் ஒழியும்.
2.குடல் புண் குணமாகவும்,வயிற்று புழுக்கள் அழியவும் அகத்தி கீரை சாப்பிட வேண்டும்.
3.தூதுவளை காய் ஊறுகாய் செய்து சாப்பிட கண் ஒளி பெருகும்.
4.வயிற்று கடுப்பு குணமாக காலையில் வெறும் வயிற்றில் வாயில் வெந்தயத்தை போட்டு பிறகு தயிர் சாப்பிட வேண்டும்.
5.மாவிலையை போடி செய்து பற்களை துலக்கி வந்தால் பற்கள் உறுதி பெரும்.
6.அரசமரத்து பாலை தடவி வர கால்பித்த வெடிப்பு குணமாகும்.
7.குங்குமப்பூவை தினசரி ஒரு சிட்டிகை தேன் கலந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.
8.காய்ச்சிய வேப்ப எண்ணையை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.
9.வில்வபழம் சாப்பிட மூளை தொடர்பான பல நோய்கள் தீரும்.
10.வெண்ணீரில் தேன் கலந்து தினமும் சாப்பிட ஞாபக சக்தி பெருகும்.

Saturday, 15 December 2012

பாரம்பரிய இயற்கை மருத்துவம்-1

1.மாதுளம்பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும்.
2.ஆஸ்துமா குணமாக வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வர நீங்கும்.
3.வாழைபட்டையை தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து ஓரிரு துளிகள் விட காதுவலி குணமாகும்.
4.கடற்சங்கை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவி வர இரண்டு நாளில் பருக்கள் மறையும்.
5.வண்டு,பூச்சி கடிக்கு வெள்ளைபூண்டை அரைத்து கடிவாயில் கட்ட விஷம் முறியும்.
6.புதிய ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
7.சப்பாத்தி பூ இலையை கட்டிகள் மீது கட்டி வந்தால் உடைந்த கட்டிகள் குணமாகும்.
8.தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு வலி குணமாகும்.
9.அகத்தி கீரை சாறு,அகத்தி கீரை பூ சாறு இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட்டு வர தொடர் தும்மல் நீங்கும்.
10.மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.

Friday, 31 August 2012

உலக அதிசயங்களையே அசர வைக்கும் தஞ்சாவூர் கோபுரம்

உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது ,இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறு
த்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)

நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , தஞ்சையை சுற்றி 100 கிலோமீட்டரில் இவ்வளவு பாறைகளை கொண்ட மலையே கிடையாது..பிறகு இவ்வளவு பாறைகள் எங்கிருந்து வந்தது ? அதை எப்படி கொண்டுவந்தனர் ?உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை !

சிந்தித்து பாருங்கள் சரியாக கட்டாமல் சாய்ந்து போன ஒரு கோபுரம் உலக அதிசயமா ? அல்லது ஆயிரம் வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக, மிக பிரம்மாண்டமாக நிற்கும் ஒரு கோபுரம் உலக அதிசயமா ?

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் ! PLS SHARE !!!

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்

இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அம
ர்ந்திருந்தார் கருணாநிதி.

தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் .அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்!

அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..?என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது.முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைதது.அரசியலில் நேர்மை,தூய்மை,அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்து அப்படியே எடுத்துக்கொண்டவரல்லவா..?

‘’ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது.எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி பரபரக்க வைத்தார்.இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா..?விட்டுவிடக்கூடாது…என்று நீதிமன்றத்துக்கும் போனார்…பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே தெரியாது என்றார்..

பிறகு நடந்தது என்ன என்பது இன்றைய மூத்த தி.மு.கவினருக்கே வெளிச்சம்.செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க,அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளானதாகவும் நடந்தேறியது..என்ற பழைய வரலாற்றை ஒரு நேர்காணலில் போட்டுடைத்தவர் காங்கிரஸ்காரரான திருச்சி வேலுசாமி.

சரி.41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.இன்று ஏன் இது சந்திக்கு வருகிறதென்றால்…..

எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ…எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ…,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று த்னது தன்மானத்தோடும் மணிமுடியையும் இழந்திருக்கிறார் கருணாநிதி.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த ,மறுத்த மகள் கனிமொழிக்காக இன்று தன் எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்திவிட்டார்..ஊர் அறிய உலகறிய!

தமிழனை ஏமாளியாக்கும் புதுதிட்டம்

இணையதள நண்பர்களே இது நீங்கள் கட்டாயமாக படிக்கவேண்டிய செய்தி... படித்துவிட்டு அனைத்து தமிழ் வாழ் நேசங்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்(Please SHARE or TAG
Tamil friends). விழிப்புணர்வை தூண்டுங்கள்... நமக்கு உணவளிக்க நாள் முழுவதும் பாடுபடும் விவசாய மக்களுக்கு ஆதரவு தாருங்கள்...

புதுதிட்டம்:
நதிநீர், மின்சாரம், மீனவர் பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் என்று எல்லாவற்றிலும் இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தப்படும் தமிழகத்தின் ஏமாளிதனத்தின் இன்னொரு அடையாளம் கெயில் (GAIL) காஸ் லைன் பதிப்பு திட்டம்.

கேரளா-கொச்சியில் இருந்து கர்நாடக-பெங்கலூருவிற்கு தமிழ்நாடு வழியாக காஸ்லைன் செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால் வரிப்பயன்&வேலை பெறுவது கேரளா, அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர காரணம் அம்மாநில விவசாயி/அரசு எதிர்பா? இல்லை தமிழர் என்ற இளக்காரமா..??

ஏழு மாவட்ட(!) விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்?? இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய்!

ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும் நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை "திஹார் ஜெயிலுக்கு போறியா?? XXX, ஓடீறு..!!". கூலிக்கு இருக்கும் ஒரு கடைநிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல் எனில் அந்த நிர்வாகத்துக்கு தமிழ்விவசாயி என்றால் எவ்வளவு அலட்சியம் கற்பிக்கபட்டிருக்கும்?

தமிழகம் வழியாக வரகூடாது என்ற கழுதை கோரிக்கை தேய்ந்து, ரயில் தட ஓரத்திலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள், விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கட்டெறும்பு கோரிக்கை வைத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.

விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலை அனைத்தும் வருமா? இதற்கான போராட்டம் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். எல்லா மாவட்ட விவசாயிகளும் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நிற்க வேண்டும். இணைய தமிழர்களும் தங்கள் ஆதரவை காட்ட வேண்டும்

இளிச்சவாய் தமிழர்களே

ஒருவேளை இந்திய அரசு அனுமதித்து.... சிங்களர்கள் தமிழகத்தில் 30 லட்சம் பேர் குடியமர்த்தப்பட்டு ..அவர்களுக்கு வாக்குரிமையும் வழங்கப்பட்டுவிட்டது என வைத்துக்கொள்வோம்........
வாக்கு பொறிக்கி திராவிட கட்சிகளின் தலைவர்கள் இப்படி தான் பேசுவார்கள்.....

கருணாநிதி: சிங்களர்கள் தமிழர்களின் அண்ணன்கள் என புறநானூற்றில் சொல்லி இருக்கிறார் பானபத்திர ஓணாண்டி புலவர்...எனவே சிங்களர்களின் வாழ்வுரிமையை காக்க தி.மு.க 
பாடுபடும்.....

ஜெயா : மைனாரிட்டி கருணாநிதி இதுவரை மைனாரிட்டி சிங்களர்களுக்கு எதுவுமே செய்யவில்லை......கழக ஆட்சியில்தான் அவர்களுக்கு ஆயுதம் வழங்கி தமிழ் மீனவனை சுட்டுகொல்ல ஆணையிட்டேன் என்பதை தெரிவித்துகொள்கிறேன்.....

எனவே தமிழர்களே மாறி மாறி இவர்களே முதல்வராக்குங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன் இளிச்சவாய் தமிழர்களே ......